யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தின் முன்பாக விழிப்புணர்வு போராட்டம் இடம்பெற்று பின்பு கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருளினால் ஏற்படும் அழிவைத் தடுப்போம் இளம் தலைமுறையைப் பாதுகாப்போம் எனும் தொனீப்பொருளில் 2020 சர்வதேச மகளிர் தினத்தன்று 50 ஆயிரம் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு கையளிக்கும் மக்கள் மனுவுக்கான போராட்டமாகவே இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு தேசிய மீனவ பெண்கள் சம்மேளனம் கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment