பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்தும் பலாலி விமான நிலையத்தினை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரடியாக ஆராய்ந்தார்.
அத்துடன் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் விமான நிலையத்தையும் நகரங்களையும் இணைக்கும் மார்க்கங்கள் தொடர்பிலும் சுற்றுலா மற்றும் உற்பத்திப் பொருட்களில் சந்தைப்படுத்தலை மேற்கொள்ளல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் இவ் விஜயத்தின் போது அதிகாரிகளோடு ஆலோசிக்கப்பட்டது.
Post a Comment