டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளது. பாஜக வுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 70 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த 8–ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்தது. தொடக்கம் முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.
முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலின் இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது.
மத்தியில் ஆளும் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஒரு சீட்கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment