nஐனிவா விவகாரம் குறித்து கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
nஐனிவாவைப் பொறுத்தமட்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கூட்டு அனுசரணையை வாபஸ் பெறப்; போவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அதே நேரத்தில் வெளிநாட்டு அமைச்சர் nஐpவா சென்று அந்த அறிவிப்பை விடுக்க இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். ஆயினும் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் அப்படியே இருக்கும். அதனால் இந்த விடயத்தில் படிப்படியாக என்ன நடக்கப் போகிறது என்று சொல்ல முடியாது.
ஆனால் இப்படியே பிரச்சனைகள் பலமாக உருவாகுமானால் அது இந்த நாட்டிற்கு நல்லது அல்ல. ஏனெ;னறால் பல விசயங்களில் பல சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் இவ்வளவு காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நல்லிணக்க முயற்சிகளை முறியடிப்பது நாட்டுக்கு மிக பாதகமான நிலைமைகளை உருவாக்கலாம்.
மேலும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் இந்த அரசைப் பொறுத்தமட்டில் ஒரு தீர்வை நோக்கி நகருகின்ற மனப்பாங்கில் இல்லை என்று தான் நினைக்கிறேன். ஆகவே கூட்டமைப்பு அதற்கு ஏற்றாற் போல் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து ஒரு தீர்வை நோக்கி நகரும்.
அதே வேளையில் அமெரிக்கால் இரானுவத் தளபதிக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மற்றும் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகுவது என்ற விடயங்கள் நிச்சயமாக அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலைமைகளை உருவாக்குமென்று தான் நினைக்கிறேன்.
இவ்வாறான நிலைமைகள் இருக்கின்ற போது எமது பிரச்சனைகளுக்கான தீர:வு விடயத்தின் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டியது அவிசயமானக இருக்கின்றது. குறிப்பாக இந்தியா இன்னும் பலமான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்க வேண்டுமென்று கோருகின்றோம். ஆனால் இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடுhக இருந்தாலும் அதில் முதலில் தங்களுடைய நன்மைகளைப் பார்ப்பார்கள்.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதே நேரத்தில் 13 ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்தால் நிச்சயமாக அதற்கு கடுமையான எதிரப்பை தெரிவிப்பது மாத்திரமல்ல அவ்வாறு 13 ஐ மாற்ற முடியாத நிலைமையை உருவாக்குவார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்.
இந்த நாட்டிலே பிரச்சனைகள் இருக்கக் கூடாதென்பதிலே மிக அவதானமாக இந்தியா இருக்கிறது. ஏனெனில் இங்கு பிரச்சனைகள் இருந்தால் அது தங்களைப் பாதிக்குமென்று அவர்கள் கருதுகின்றார்கள். ஆகiயினால் அழுத்தங்களைக் கொடுத்து பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவே முயலுவார்கள் என்றார்.
Post a Comment