மரக்கறிக்குள் கஞ்சா கடத்தல் - மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகத்தில் ஒருவர் கைது - Yarl Voice மரக்கறிக்குள் கஞ்சா கடத்தல் - மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகத்தில் ஒருவர் கைது - Yarl Voice

மரக்கறிக்குள் கஞ்சா கடத்தல் - மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூடடைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்படடார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட் நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட் கஞ்சா போதைப் பொருள் ஆகியன நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையை சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post