யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் கை மாற்றலுக்குத் தயாராக இருந்த நூறு கிலோக் கிராம் கஞ்சா சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த கஞ்சா போதைப்பொருள் கடத்தலுக்கு தயாராக இருப்பதாக கடற்படையினர் சங்கானை மதுவரித் திணைக்கழகத்துக்கு வழங்கிய தகவலையடுத்து சங்கானை மதிவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பிரபாத் விக்கிரமசூரிய தலைமையில் மதுவரி அத்தியட்சகர் மதன் மோகன்இபொறுப்பதிகாரி சஞ்சு ஸ்ரீமன்ன ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
சங்கானை மதுவரி தினைக்களம் கடந்த ஒருவாரத்தில் அறுநூறு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளினை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment