வடக்கில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் சந்தியமூர்த்தி தெரிவித்தார்.
அவ்வாறான தாக்கம் ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்கவும் உரிய சிகிச்சை வழங்கவும் யாழ்.போதனா வைத்திய சாலை தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.போதனா வைத்திய சாலை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்குவதற்கு தயாராக உள்ளது. குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தனியான விடுதி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அந்த விடுதியில் பணியாற்றுவதற்கான உத்தியோகஸ்தர்கள் மற்றும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பூரண வைத்திய சேவை செய்ய கூடிய வசதிகள் போதனா வைத்தியசாலை உள்ளது. எனவே அந்த வைரஸ் தொற்றுத் தொடர்பில் பொது மக்கள் பீதியடைய தேவையில்லை.
இதுவரையில் குறித்த வைரஸ் தொற்றுத் தொடர்பில் எவரும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. நாட்டில் சீனப் பெண்ணை தவிர்ந்து வேறு எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானதாக அண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவ்வாறன முகக்கவசங்கள் அணிய வேண்டிய தேவை தற்போதுவரை ஏற்றடவில்லை.
மேலும் சீனா உள்ளிட்ட வேறு சில நாடுகளுக்கு சென்று மீண்டும் இங்கு வந்துள்ளவர்கள் மத்தியில் தமக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலைக்கு வருகின்றார்கள். தம்மை வைத்திய சோதணைக்கு உட்படுத்துமாறு கோருகின்றார்கள்.
சுகாதார அமைச்சினால் குறித்த வைரஸ் தாக்கம் தொடர்பில் சிகிச்சை வழங்க வேண்டியவர்கள் அல்லது வைத்திய பரிசோதணை செய்ய வேண்டியவர்கள் தொடர்பில் சில அறிவுறுத்தல்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் இந்த வைத்திய பரிசோதணைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
வைரஸ் தொற்று தொடர்பில் சந்தேகம் உள்ளவர்களுடைய சளி போன்ற மாதிகரிளை கொழும்பிற்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றும் நிலைகளை கருத்தில் கொண்டு அந்த மாதிரிகளை தகுந்த பாதுகாப்புடம் அனுப்பிவைக்கவும் எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினு இதுவரையில் எவருடைய மாதிரிகளும் கொழுப்பிற்கு அனுப்பிவைக்கப்படவில்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.
Post a Comment