கிராமத்துக்கு ஒரு வீடு - நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்புத் திட்டம் யாழிலும் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice கிராமத்துக்கு ஒரு வீடு - நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்புத் திட்டம் யாழிலும் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice

கிராமத்துக்கு ஒரு வீடு - நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்புத் திட்டம் யாழிலும் ஆரம்பித்து வைப்பு

நாடுமுழுவதும் குறைந்த வருமானம் பெறும் 14 ஆயிரத்து 22 குடும்பங்களுக்காக அமைக்கப்படவுள்ள 'கிராமத்துக்கு ஒர் வீடு - நாட்டுக்கு ஓர் எதிர்காலம்' (கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக்) என்ற வீடமைப்பு திட்டத்தின் நிர்மாண பணிகள  நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

மக்களுக்கு வாழ்வில் அடுத்தபடியை எடுத்து வைக்கும் இச்செயற்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முயற்சியின் பயனாக யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 10 தேர்தல் தொகுதியிலும் தலா ஒரு பயனாளி என்ற வீதம் 7 பயனாளிகளுக்கு நேற்றையதினம் தினம் இவ் வீட்டுத் திட்டம் வழங்கிவைக்கப்பட்டது .

 இன்று  யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதிகளில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனினால் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்து கிராமத்துக்கு ஒரு வீடு - நாட்டுக்கு எதிர்காலம் திட்டம் ஆரம்பமாகியது.

அத்துடன்  ஒவ்வொரு பயனாளியின் வளவிலும் தலா இரண்டு பயன்தரு மரங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் நாட்டப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது பயனாளிகளிடம் அங்கஜன் இராமநாதன் 'தமது குடும்பத்தின் வாழ்க்கையின் ஆரம்பபடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இதனுடாக தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை கொடுத்து எமது சமுதாயத்திற்கு இப் பிள்ளைகயை சிறந்த இளைஞர்களாக உருவாக்குவதன் மூலமே எம் சமூகம் பொருளாதார ரீதியில் உயர்வடையும் ஆகவே இவ் அபிவிருத்தி தமக்கும் தமது குடும்பத்திற்கும் வரப்போகும் எதிர்கால வெற்றியின் அத்திவாரக்கல்லே ஆகும்' எனக் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post