போர்க்குற்றச்சாட்டுகள் சம்பந்தமான விசாரணையை அரசாங்கம் முன்னெடுத்திருந்தால் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் தடை ஏற்படுத்தப்படாமல் இருந்திருந்திருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ள காலக்கட்டம் தொடர்பில் சந்தேகம் எழுந்திருப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தமது பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எம.சி.சி உடன்படிக்கை சர்ச்சையை அமெரிக்க ஏற்படுத்தி தாம் அங்கம் வகித்த கட்சிக்கு பாதிப்பை உருவாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோன்று தற்போது சவேந்திர சில்வா மீதான தடையை ஏற்படுத்தி நடப்பு அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவை பெற்று கொடுக்க அமெரிக்க முயற்சிக்கின்றதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
Post a Comment