சிறுபாண்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக - ஓபிஎஸ் ஈபீஎஸ் அறிக்கை - Yarl Voice சிறுபாண்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக - ஓபிஎஸ் ஈபீஎஸ் அறிக்கை - Yarl Voice

சிறுபாண்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக - ஓபிஎஸ் ஈபீஎஸ் அறிக்கை

சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைகுரிய அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என்று அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் இ துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

சிறுபான்மை மக்களின் நலன் காக்க அ.தி.மு.க. எப்போதும் உறுதியாய் பாடுபடும். அ.தி.மு.க. அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல்  பொய் பிரசாரங்களை தூண்டி விட்டு இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிக்கிறது.

2003-ஆம் ஆண்டு மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த பா.ஜ.க. ஆட்சியின்போது என்.பி.ஆர் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்க ஏதுவாக குடியுரிமை சட்டத்தில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து நபர்களின் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி  குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின்படி பதிவு செய்யப்படுகிறது.

தாய்மொழிஇ தாய்இ தந்தை பிறந்த இடம் ஆதார் கைப்பேசி உள்ளிட்ட விவரங்களை 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post