யாழ்.இளவாலை- சாந்தை பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந் துள்ளது. இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 போ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது குறித்த பகுதி யில் உள்ள நபா் ஒருவா் நாய் ஒன்றை வளா்த்துவந்துள்ளாா். குறித்த நாய் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் நாயை அடித்து
துன்புறுத்திய நிலையில் நாய் குற்றுயிராக கிடந்துள்ளது. இதனையடுத்து நாயின் உாிமையாளா் கோபமடைந்து வாயில்லாத ஜீவனை அடித்து துன்புறுத்துவதா? என பேசியிருக்கின்றாா். இதனை யடுத்து அயல் வீட்டாா் குறித்த
நாயின் உாிமையாளருடன் தா்க்கப்பட்டுள்ளாா். அந்த தா்க்கம் மேலும் முற்றிய நிலையில் அயல் வீட்டிலிருந்தவா்கள் நாயின் உாிமையாளா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருப்பதுடன் அவருடைய வீட்டுக்குள் புகுந்தும்
தாக்குதல் நடாத்தியுள்ளனா். இந்நிலையில் காயமடைந்த 3 பேரும் தெல்லிப்பளை வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தையடுத்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதுடன்
3 போ் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் மேலும் சம்பவம் தொடா்பாக இளவாலை பொலி ஸாா் விசாரணைகளை நடாத்திவருகின்றனா்.
Post a Comment