தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ விக்கினேஸ்வரன் நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று முன்னணி பதிலளித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழிலுள்ள அலுவலகத்தில் இன்றை புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போது அக் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் பதிலளித்துள்ளார்.
இதன் போது விக்கினேஸ்வரனின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து சுகாஷ். விக்கினேஸ்வரன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுக்கள் கேள்விகள் தொடர்பில் தொடர்ந்தும் பேசுவதாயின் விக்கினேஸ்வரனுடன பகிரங்க விவாதத்திற்கும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் போது விக்கினேஸ்வரனின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் தனித்தனியே பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment