சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் யாழில் கௌரவிப்பு - Yarl Voice சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் யாழில் கௌரவிப்பு - Yarl Voice

சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் யாழில் கௌரவிப்பு

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும்  கால்நடை அபிவிருத்தி  நீர்ப்பாசனம்  மீன்பிடி  நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிக்கும் விழா ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை வடமாகாண கமத்தொழில் அமைச்சின் செயலகர் தெய்வேந்திரம் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் கமத்தொழில் பிரதியமைச்சருமான  அங்கஜன் இராமநாதன் அவர்களும்  விருந்தினர்களாக தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் சீ.பெரியசாமி அவர்களும் மற்றும் கமத்தொழில்சார் வைத்தியர்கள் விவசாய போதனாசிரியர்கள் கமத்தொழில் சார் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் பண்ணையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விவசாய அமைப்பின் தலைவர் அவர்களினால் விவசாய காப்புறுதி உரத்தட்டுப்பாடுஇஓய்வுதியம்இமானியம்இ கட்டக்காலி நாய்கள் உள்ளிட்ட 10 கோரிக்கை அடங்கிய பத்திரம் ஒன்று அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சிறப்புரை ஆற்றிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் பெரியசாமி அவர்கள் விவசாயத்தின் போது விவசாய தகவல் தொடர்பாடலால் கிடைக்கும் நன்மைகளை பற்றி உரையாற்றினர்.

தொடர்ந்து உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் விவசாயம் சம்மந்தமான இவ் வரலாற்று விழாவிற்கு அழைத்ததுற்கு விழாக் குழுமத்திற்கு நன்றி தெரிவித்து தொடர்ந்து

யாழ்ப்பாணத்தில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி தேவை புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டமான 'நிறைவான கிராமம்' திட்டம் மூலம் வருமானங்களை அதிகரிக்ககூடிய வழிவகையான திட்டங்கள் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்.

பரீசலித்து முடிந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'நிறைவான கிராமம்' முதற்கட்டத் திட்டத்தில் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் வீதம் 435 கிராமத்திற்கு  870 மில்லியன் ஒதுக்கப்பட்டு ஆரம்பமான வேலைத்திட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் குறைவாக காணப்படுகிறது.

அடுத்தகட்டமாக இடம்பெறவுள்ள இரண்டாம் பகுதியான கிராமத்திற்கு 3 மில்லியன் ரூபா ஒதிக்கீட்டில் கிராம அமைப்க்களிடையே ஆன கூட்டங்கள் நடைபெறும் சந்தர்பங்களில் கிராமமட்ட விவசாய அமைப்புக்கள் வருகை தந்து தமது விவசாயக்கிணறு விவசாய வீதி  விவசாய வேலி என்ற கிராமிய பொருளாதாரத்தை வளர்க்க அபிவிருத்தித்திட்டங்கள் முன்மொழியப்பட்டால் விவசாயம் போன்ற துறைகளுக்கும் ஒரு பங்கீட்டான ஒதுக்கீடு காணப்படும் இதன் மூலம் கிராம மட்டத்தில் விவசாயம் வளர்ச்சியடையும் என்றார்.

இறுதியாக மாவட்ட ரீதியில் விவசாயம் பண்ணை வளர்ப்பு பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களை பெற்றவர்களுக்கான கெளரவிப்பு இடம்பெற்றது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post