எதிர்வரும் பொதுத் தேர்தலில் சின்னத்தில் மாற்றம் ஏற்படும் என்றால் போட்டியிடுவது குறித்து சிந்திக்க வேண்டி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதி என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மேலும் பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சிக்குள் தொடர்ந்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றது என கூறிய நவீன் திஸாநாயக்க யானை சின்னத்தில் போட்டியிடுவதையே பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்றும் அதுவே சிறந்தது என்றும் கூறினார்.
Post a Comment