தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கல்விக்கரம் உதவி மையமும் இணைந்து நடாத்தும் ஊரோடு உறவாடுவோம் விளையாட்டு எழுச்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கிலியன். (கிட்டுப்) பூங்காவில் நடைபெற்றது
வடகிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த எழுச்சி நிகழ்வு இன்று யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. ஏற்கனவே பல இடங்களில் நடைபெற்றிரக்கின்ற இந் நிகழ்வு தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் நடைபெறவிருக்கிறது.
இதற்கமைய இன்றையதினம் நடைபெற்ற இந் நிகழ்வில் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் மணிவண்ணண், சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
Post a Comment