சீனாவில் கற்பழிக்க முயன்றவரிடம் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பயமுறுத்தி இளம்பெண் தப்பியுள்ளார். கற்பழிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட வுகான் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஜிங்ஷான் நகரம்.
இங்கு கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். கூச்சலிட்ட அப்பெண்ணின் கழுத்தை நெரித்தும் வாயை மூடியும் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் சாதுர்யமாக யோசித்து பலமாக இருமினார். அத்துடன் வுகான் நகரில் இருந்து வந்திருப்பதாகவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தன்னை தனிமையில் வைத்துள்ளதாகவும் கூறி மேலும் பலமாக இருமி பயமுறுத்தினார்.
இதனை கேட்ட மர்மநபர் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார். கையில் கிடைத்த பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை ஜிங்ஷான் பொது பாதுகாப்பு அமைப்பு சமூக வலைத்தளம் மூலம் வெளியிட்டுள்ளது.
Post a Comment