த.தே.கூ, ஈபிடிபி, ஐ.தே.க, பொதுஐன பெரமுன இணைந்து அங்கஐனுக்கு யாழில் கடும் எதிர்ப்பு - சமரசப்படுத்தும் முயற்சியும் தோல்வி - Yarl Voice த.தே.கூ, ஈபிடிபி, ஐ.தே.க, பொதுஐன பெரமுன இணைந்து அங்கஐனுக்கு யாழில் கடும் எதிர்ப்பு - சமரசப்படுத்தும் முயற்சியும் தோல்வி - Yarl Voice

த.தே.கூ, ஈபிடிபி, ஐ.தே.க, பொதுஐன பெரமுன இணைந்து அங்கஐனுக்கு யாழில் கடும் எதிர்ப்பு - சமரசப்படுத்தும் முயற்சியும் தோல்வி



தீவகப் பகுதியில் உள்ள மூன்று பிரதேச செயலகங்கலை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதனுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுத்தனர்.

இதனால் வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை பிரதேச செயலகத்தின் நுழை வாயிலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இடை வழி மறித்தனர்.

இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.




0/Post a Comment/Comments

Previous Post Next Post