கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
சற்றுமுன்னர் அங்கு சென்றிருந்த ஜனாதிபதி சிறைச்சாலையில் உள்ள நிலமைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சிறைச்சாலையில் தண்டனை வழங்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உள்ளனர்.
இதேவேளை தண்டனை பெற்றுள்ள தமது தந்தையை பொது மன்னிப்பில் விடுவிக்கக் கோரி காத்திருக்கும் இரு பிள்ளைகலின் தந்தையான அரசியல் கைதி ஆனந்த சுதாகரனும் அங்கு தண்டனை அனுபவித்து வருகின்றார்.
இந்நிலையில் குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதிஇ தமிழ் அரசியல் கைதிகளையும் சந்திப்பாரா என்பது தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
Post a Comment