விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் நடித்த 'பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள் அலுவலகங்கள் வீடுகள் நடிகர் விஜய்யின் பண்ணை வீடு நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.
இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய்யும் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment