த.தே.ம முன்னணியின் ஊரோடு உறவாடுவோம் கலைப் பிரிவினரின் விளையாட்டு நிகழ்வில் பங்கெடுத்த வீரங்கனைகள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மகளிர் அணித் தலைவி வாசுகி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இந் நிகழ்வின் பின் ஐ.நா தீர்மானத்தில் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக் கொள்வது தொடர்பில் ஊடகங்களுக்கு கஜேந்திரகுமார் கருத்துத் தெரிவித்தார்,
இதில் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவுக்கான பயணத் தடையை ஐ.நா வின் விசாணைகளுக்கு அமைய எடுக்கப்படுள்ளதாக ஒரு தரப்பு கூறி வருகிறது. ஆனால் அதுவல்ல உண்மை.
சீனா சார்பில் இருந்து விலகாமல் ஐரோப்பிய நாடுகளின் வட்டத்துக்குள் வராது விட்டால், சவேந்திர சில்வாவுக்கு மட்டுமல் ராஜபக்சவுக்கும் இது தான் நிலை என்பதை இந்தத் தடையினூடாக அமெரிக்கா சொல்லியுள்ளது.
மேலும் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறமை தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கையில்..
அவ்வாறு விசாரணை முடிவடைந்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய.; இலங்கையில் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற வேண்டியது தொடர்பான அறிக்கை ஒன்றை மாத்திரம் ஐ.நா வெளியிட்டது அதனை சர்வதேச விசாரணை இடம்பெற்றுவிட்டதாக ஒரு தரப்பு பொய்களை கூறிவருகிறது.
Post a Comment