எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இணைத்துக் கொண்டு போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முடிவு செய்துள்ளது.
புதிய கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயற்பட உள்ளனர் என்று பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவாசம் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் இன்று திங்கட்கிழமை பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
Post a Comment