பொதுக் கூட்டணியின் சின்னம் குறித்து இறுதிக் கலந்துரையாடலை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி நாளை வெள்ளிக்கிழமை கூடுகின்றது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்று இரவு விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மத்தும பண்டார கபீர் ஹாஷிம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் சின்னம் குறித்து பலதரப்பட்ட கோரிக்கைகளை சஜித் அணி முன்வைத்திருக்கின்ற போதிலும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் சந்திப்பு முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவை அறிவிக்கவும் சஜித் அணி எதிர்பார்த்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment