மத்திய அரசாங்கத்தின் நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்தில் மக்களால் முன்னுரிமை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்படாமல் மக்கள் முன்னுரிமைக்குப்; புறம்பாக இடம்பெற்ற வீதிகளின் பட்டியல்களை நிராகரிப்பது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தீர்மானம் எடுத்துள்ளது.
நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறவுள்ள அபிவிருத்தத் திட்டங்களுக்கான விபரங்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு கடந்த 3 ஆம் திகதி பிரதேச செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் வலிகாமம் கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி திட்டத்திற்கு சபை அங்கீகாரம் வழங்க முடியாது எனத் தெரிவித்து விசேட கூட்டத்தினைக் கூட்டுமாறு தவிசாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரதேச சபைச் சட்டத்தின் பிரகாரம் சபையின் மூன்றிலொரு பங்கிற்கு மேற்பட்ட உறுப்பினர்களால் இக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று திங்கட் கிழமை சபை கூடியது.
இக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய தவிசாளர்இ நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்தில் மக்களினால் முன்வைக்கப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் நிராகரிக்கப்பட்டிருப்பின் அது கண்டிக்கத்தக்கது.
எனினும் தற்போது இத் திட்டத்தில் கிடைத்துள்ள வீதி விபரங்களை சர்ச்சைக்கு உட்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இப் பட்டியல்கள் அரச நிர்வாக ரீதியில் இற்றைப்படுத்தப்பட்ட பட்டியல்கள் ஆகும்.
மாவட்ட அபிவிருத்திக் குழுவிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதேவேளை விரைவில் பாராளுமன்றத்தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் இப் பணம் திரும்பிச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தலைமையுரையைத் தெடர்ந்து விசேட கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு தவிசாளரினால் இடமளிக்கப்பட்டது. இதில் பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்ற அபிவிருத்தித் திட்ட நிரலில் மக்களின் பங்கேற்புடனான அபிவிருத்தித் தெரிவுகளுக்கு புறம்பாக வீதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும்இ அவ்வாறான குறைபாடுகள் உடைய திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு சபை அனுமதிக்காது என வாதிட்டனர்.
சபையில் பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் திட்டங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் தவிர்ந்த ஏனைய திட்டங்களை முன்னொடுக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்திற்கு பிரதேச செயலாகமே மக்கள் பங்கேற்புக்கூட்டம் அது தொடர்பான நிரல்படுத்தல்களை மேற்கொண்டமையினால் பிரதேச செயலகத்திடம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திட்டங்களின் அட்டவணையைக் கோரி அதில் முன்னுரிமைக்குரியதாக உள்ளடக்கப்பட்டுள்ள திட்டங்களை மட்டுமே வீதிகளில் நிறைவேற்ற முடிவு முடியும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை இவ் விடயத்தில் இவ் இழுபறி நிலைமைகளின் காரணமாக கிடைக்கப்பெற்ற நிதி திரும்பிச் செல்லுமாகக் காணப்படின் அதற்கு இவ் அவையே முழுமையான பொறுப்புடையது என தவிசாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு சபையில் சுதந்திரக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிர்ந்த ஏனையோர் நிதி திரும்புதல் விடயத்தில் சபை முழுப்பெறுப்புடையது எனத் தெரிவித்தனர்.
இந் நிலையில் நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை பிரதேச செயலாளரிடம் கோரி அதில் கிடைக்கப்பெற்ற அட்டவணையில் காணப்படும் வீதிகளை முன்னெடுப்பதற்கு சபையில் முடிவு எட்டப்பட்டது.
இதன் பிரகாரம் நிறைவான கிராமம் அபிவிருத்தியில் கிடைக்கப்பெற்ற 49 வீதிகளில் 18 வீதிகள் வரையிலேயே முன்னெடுக்கப்படும் சாத்தியமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment