முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது புதல்வியான தரணி சிறிசேன சட்டத்தரணியாக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இதற்கான நிகழ்வு இன்று காலை நடைபெற்றிருக்கிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் குடும்ப சகிதம் கலந்துகொண்டார்.
மேலும் இன்று தொடக்கம் 500 பேர் வரை சட்டத்தரணிகளாக உச்சநீதிமன்றில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
சாதாரணமாக இலங்கையில் அரசியல்வாதி ஒருவரது மகனோ அல்லது மகளோ சட்டத்தரணியாகிவிட்டால் அடுத்தகட்டமாக அரசியலில் நுழைவதே வழமையாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் உள்ள பலரும் சட்டத்தரணிகளாகவே இருக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகள் பலரும் குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மகளும் அரசியலில் நுழைவாரா என்கிற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
Post a Comment