அன்னச் சின்னத்தை வழங்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் பொதுக் கூட்டணிக்கு புதிய ஜனநாயக கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நேற்று இரவில் சந்திப்பு நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுதவிர புதிய ஜனநாயக கட்சியின் செயலாளர் சர்மிளா பெரேராவும் கலந்து கொண்டார்.
இதன்போதே அன்னம் சின்னத்தை வழங்குவதற்கான விருப்பத்தை புதிய ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment