பதின்நான்கு வருடங்களிற்கு முன் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலையில் மரணித்த மாணவன் மனோகரன் ரஜித்தர் அவர்களின் தாயார் திருமதி மனோகரனின் அகாலச் செய்தி குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
தம் சொந்தங்களிற்கு நடந்த அநீதிகளிற்கு நீண்ட கால போராட்டங்களின் பின்னும் நீதியை காணாமல் இயற்க்கை எய்திய எம்மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த மனவேதனையை தருகின்றது.
தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதனை கண்டுகொள்ளாமல் திருமதி மனோகரன் அவர்கள் மரணித்தமை ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழப்பினால் துயருற்றுள்ள வைத்தியர் மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்