வடமாகாண பிரதம செயலாளர் அரச அதிபர் ஆளுநர் செயலாளர் இணைப்பு செயலாளர் போன்றோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர் இதன் போது யாழ் மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு வீட்டுத்திட்டம் மற்றும் வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனியாக ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
இதன் பின்னர் கருத்துரைத்த வடமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள்...
காணிகளை விடுவிக்குமாறு கூறப்படுகின்ற நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களால் துப்பரவாக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றி ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
இதனால் இவற்றை மையப்படுத்திய ஏனைய அபிவிருத்திகள் தடைப்படுகின்றன எனவும் ஒரு மாத காலத்துக்குள் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளை மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை பிரதேச செயலாளர் விடுவிக்கபட்ட காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தும்படி ஆளுநர் பணிப்புரைவிடுத்தார்.
வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படுபவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும்படியும் உண்மையாக வீடு தேவைப்படுகின்ற குடும்பங்களுக்கு வீட்டு திட்டத்தின் பயன்பாடை கிடைக்க செய்யும் படியும் ஆளுநர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் விடுவிக்கபட்ட காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்று காணிகளை பயன்பாட்டுக்கு உட்படுத்துமாறு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தோர் யதார்த்தமாக இவ் விடயம் தொடர்பில் சிந்தித்து மீளப்பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை பொறுப்பேற்று பயன்பாட்டுக்கு உட்படுத்துவதை உறுதிப்படுத்துமாறும் இவ்விடயம் தொடர்பில் கண்டிப்புடன் நடந்துகொள்ளுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதே வேளை நாடளாவிய ரீதியில் கிராமள் சேவகர்க தமது கடமைகளையும் சேவைகளையும் மக்களுக்கு சரி வர செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக கண்காணிக்கும் படியும் ஜனாதிபதி செயலகத்தில் அறிவுரை வழங்கப்பட்டதாக கௌரவ ஆளுநர் நினைவுபடுத்தினார்.
இந்த அரச சேவை மக்களுக்கு சரிவர கிடைக்கிறது என்பது பற்றி உறுதிபடுத்த வேண்டியது அவசியம் எனவும் அரசசேவை நன்மதிப்பிற்காக அரச அதிகாரிகள் உண்மையாகவும் வினைத்திறனுடனும் தொழிற்படுமாறும் ஒவ்வொருவரும் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து மக்களுக்காக உண்மையுடன் கடமையாற்றும் படி ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் அறிவுர்த்தினார்.
Post a Comment