ஹைதராபாத்தில் உள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவை நேற்று சென்றடைந்தார்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தற்போது சந்தித்து கலந்துரையாடி வருவதாக தெரியவருகின்றது.
யு.எல் 195 என்ற விமானத்தின் ஊடாக நாட்டில் இருந்து பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்தார்
இந்த விஜயத்தின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ஸ புத்தகயா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம்இ எதிர்வரும் 11 ஆம் திகதி குறித்த இந்திய விஜயத்தினை நிறைவு செய்து பிரதமர் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment