அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அமெரிக்காவுடன் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
இதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தமது ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
Post a Comment