தன் மீது தொடர்ச்சியாக பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு அமைச்சர் இரண்டு வாரங்களில் பதிலளிக்காவிட்டால் வழக்குத் தொடரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் 'அமைச்சர் விமல் வீரவன்ஸ என்மீது அபாண்டங்களை கொட்டித் தீர்த்திருக்கின்றார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் தொடர்ந்த சதி என்மீது அவர் தொடர் தேர்ச்சியாக பல பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்.
அதேபோலத்தான் தற்போது கூறியுள்ளார் அமெரிக்காவில் எனக்கு ஒரு வங்கி கணக்கு இருப்பதாகவும் அதற்கு நான் ஒரு இலட்சம் டொலர் பணம் அனுப்பியுள்ளதாகவும் அப்பட்டமான பொய்யினைக் கூறியுள்ளார்.
எனினும் எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ அமெரிக்க வங்கிகளில் எவ்வித கணக்குகளும் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment