உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சீனத் தேசிய சுகாதார அணையம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாகக் குறைந்துள்ளதனை சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி குவோ யன் ஹொங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் 'ஹூபெய் மாநிலத்தில் வூஹான் நகரைத் தவிர பிற நகரங்களுக்கும் சீனாவின் 16 மாநிலங்களுக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியிலான உதவி முறை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஹூபெய் மாநில நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை ஆற்றல் வலுப்படுத்தப்படும்' என கூறினார். ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியால் முன்னேற்றம் மேலும் தெளிவாகக் காணப்பட்டுள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 908ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு 40171 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment