தமிழ் மக்களது வாக்கில் அவர்களது செல்வாக்கில் இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கு ஒரு யாப்பு இல்லை ஒரு செயலாளர் இல்லை பொருளாளர் யாரும் இல்லை என முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி உறுப்பினரும் ஈழ மக்கள் புட்சிகர முன்னணி முக்கியஸ்தருமான கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்
பருத்தித்துறை தம்பசிட்டியில் நேற்று இடம் பெற்ற தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கு கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள் 8.7 வீதம் பிறப்பு வீதம் அதிகரிப்பு. வடக்கு கிழக்கு இணைப்பில் முஸ்லிம்கள் எதிர்ப்பதற்க்கு காரணம் இவ்வாறன இனப்பெருக்க வீதம் அதிகரிப்பின் காரணமாக வரும் 10 ஆண்டுகளில் அவர்களுடைய ஆதிக்கத்தில் கொண்டு வந்து தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவே என்றும் வடக்கு மாகாணத்தில் சுமார் 40. ஆயிரம் வரை பெண் தலமைத்துவ குடும்பங்கள் வசிப்பதாகவும் தெரிவித்ததுடன் வடக்கு கிழக்கில் ஆயிரம் புத்த கோவில்களை ரணில் அரசாங்கம் அமைக்க முயன்றதாகவும் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்ததாகவும்இ
இவ்வாறு 1000 புத்த விகாரைகளை அரசு அமைக்குமாக இருந்தால் இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாறும் நிலை உருவாகியிருக்கும்.வடக்கு மாகாணத்தில் 7 இலட்சம் மக்கள் வசிப்பதாகவும் இராணுவம் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக இருப்பதாகவும் ஆகவே இது ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் காணப்படுவதாகவும்
இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்றும் இங்கு அபிவிருத்தியே தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்ததற்க்கு பதிலளித்த கலாநிதி சர்வேஸ்வரன் இங்கே தமிழ் மக்கள் சோற்றுக்காக மக்கள் போராடவில்லை நாங்கள் விடுதலைக்காக போராடும் இனம்.
அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்தன தோற்றுப்போன ஒரு விடயத்தை வரலாற்றை அறிந்து கொள்ளாத ஜனாதிபயே இவ்வாறு தெரிவித்டாகவும் இலங்கையில் ஸ்திர தன்மை இல்லை என்றும் அவ்வாறான ஒரு நிலையில் இலங்கையில் எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் இலங்கை தற்போது சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்.
இவ்வாறானா நிலையில் எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்ததுடன் கம்பிரலிய எனபது ரணிலில் ஆழும் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியே கூட்டமைப்புக்கும் ஒதுக்கபட்தாகவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 40 கோடி ஒதுக்கபட்தாகவும் இதில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்க கூடிய ஏதும் செய்யவில்லை என்றும் இது ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கியதறக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைமாற்றாக வழங்கப்பட்தாகவும் கூட்டமைப்பும் ஆழும் கட்சியாகவே செயற்பட்தாகவும் தெரிவித்தார்.
மேற்படி தேர்தல் பிரசார கூட்டம் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி செயற்பாட்டாளர் தவராசா தலமையில் இடம் பெற்றது. இதில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ந.நிறஞ்சன் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி வடமராட்சி அமைப்பாளர் சி.சிவகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர்.இந் நிகழ்வில் ஈழ மக்கள் பிரட்சிகர முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment