பகிடிவதை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை - பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை வழங்க வேண்டும் - வடக்கு ஆளுநர் கோரிக்கை - Yarl Voice பகிடிவதை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை - பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை வழங்க வேண்டும் - வடக்கு ஆளுநர் கோரிக்கை - Yarl Voice

பகிடிவதை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை - பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை வழங்க வேண்டும் - வடக்கு ஆளுநர் கோரிக்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை வழங்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் அவ்வாறு முறைப்பாடுகளை வழங்கினால் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாலுள்ள மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று மாலை ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது பல்கலைக்கழக பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து தொடர்ந்து தெரிவித்ததாவது..

பல்கலைக்கழகத்தில் ராக்கிங் என்ற போர்வையில் இடம்பெற்ற பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆயினும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் எமக்கு முறைப்பாடு தெரிவிக்கவில்லை. அவ்வாறு மாணவர்கள் முறைப்பாட்டை தெரிவிக்குமிடத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவே இருக்கிறோம். ஆகையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று கோருகின்றோம்.

இதே வேளை இவ்வாறு நேரடியாக முறைப்பாடுகள் எவையும் எமக்கு கிடைக்காமல் விட்டாலும் இது சம்மந்தமான முறைப்பாடுகள் வேறு தரப்பினர்கள் ஊடாக கிடைக்கப் பெற்றுத் தான் இருக்கின்றன. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கின்ற போது அது சம்நமந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் விரைவாக எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post