முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய சுதந்திர தின நிகழ்வை ஏன் புறக்கணிக்கார் என்கிற கேள்வி பலருடைய மனங்களிலும் உள்ளது. இதற்கு தற்போது விடை கிடைத்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாஷிமின் புதல்வியின் திருமணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் சென்றிருந்தார்.
அப்போது பிரதமரும் ஜனாதிபதியும் மண்டபத்தில் இருந்ததினால் மண்டப வளாகத்தில் பலமடங்கு பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.
இதனிடையே அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி தை;திரிபால சிறிசேனவை மண்டபத்திலிருந்து சுமார் ஒருகிலோ மீற்றர் தூரத்திலேயே பாதுகாப்பு குழுவினர் நிறுத்தி அங்கிருந்து நடக்கவைத்துள்ளர் என தெரிவிக்கப்படுகின்றது.
இப்படியான நிலைமை சுதந்திர தினத்தன்று தனக்கு ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே நிகழ்வுக்கு வருவதை அவர் தவிர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை மொட்டுச் சின்னத்தில் பொலனறுவை மாவட்டத்தில் தனக்கு போட்டியிட சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதாலேயே சுதந்திர தின நிகழ்வை மைத்திரி புறக்கணித்தார் என்ற மற்றுமொரு செய்தியும் பரவிவருகின்றது.
மைத்திரியை நடக்கவிட்ட ராஐபக்ச?
Published byYarl Voice Editor
-
0
Tags
Lanka
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
Post a Comment