லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன் சாந்தனு ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர்.
விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து 4 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகிய நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் காத்திருந்தனர்.
அந்த வகையில் படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு குட்டி கதை என்ற பாடலை வெளியிட உள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வதை விஜய் வழக்கமாக வைத்திருப்பார். தற்போது ஒரு பாடலே அப்படி வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Post a Comment