கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தீவிரம் - சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்த சீன ஜனாதிபதி - Yarl Voice கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தீவிரம் - சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்த சீன ஜனாதிபதி - Yarl Voice

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தீவிரம் - சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்த சீன ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளதால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனா (கொவைட்-19) வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சீனா முழுவதும் கொரோனா (கொவைட்-19) வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76936 இற்கும் அதிகமாக உள்ளதுடன் மேலும் அதிகரித்துச் செல்கின்றது.

உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்கின்ற நிலையிலேயே சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து கடந்த முதலாம் திகதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post