தொடர் தோல்விகளால் தலைமைப் பொறுப்பை இராஜினாமா செய்த டு பிளெஸிஸ் - Yarl Voice தொடர் தோல்விகளால் தலைமைப் பொறுப்பை இராஜினாமா செய்த டு பிளெஸிஸ் - Yarl Voice

தொடர் தோல்விகளால் தலைமைப் பொறுப்பை இராஜினாமா செய்த டு பிளெஸிஸ்

தென்னாபிரிக்கா டெஸ்ட் மற்றும் ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை பாப் டு பிளெஸிஸ் இராஜினாமா செய்துள்ளார்.

சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரின் அவமானத் தோல்வியின் பின்னர் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட டு பிளெஸிஸ்இ இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக்கிண்ண தொடரில் அணி தோல்வியை சந்தித்ததையடுத்து ஒருநாள் அணியின் பதவியை இராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக மற்றும் செயற்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் இந்த பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் தென்னாபிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு குயிண்டன் டி கொக் நிரந்தர அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரின்போது ரி-20 அணிக்கு அணித்தலைவராக செயற்பட்ட குயிண்டன் டி கொக் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் அணித்தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தென்னாபிரிக்காவிற்கு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக சென்ற இங்கிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியை நிலைகுலைய வைத்தது

முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இதன்பிறகு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இறுதியாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

டு பிளெசிஸ் கடந்த 2012ஆம் ஆண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 112 சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்தியுள்ளார்.

முதன்முறையாக தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்திய நியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்கா அணியை 36 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ள டு பிளெஸிஸ்இ 18 போட்டிகளில் வெற்றியையும் 15 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

இதேபோல 39 ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியை வழிநடத்தியுள்ள டு பிளெஸிஸ் 28 போட்டிகளில் வெற்றியையும் 10 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஒரு போட்டிககு முடிவு இல்லை.

மேலும்இ 37 ரி-20 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியை வழிநடத்தியுள்ள டு பிளெஸிஸ் 23 போட்டிகளில் வெற்றியையும் 13 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

டு பிளெசிஸ் அணித்தலைவராக 11 சதங்களையும் 28 அரைசதங்களையும் அடித்துள்ளார். அத்தோடு அனைத்து போட்டிகளிலும் 5101 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

35 வயதான பாப் டு பிளெஸிஸ் இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் 3901 ஓட்டங்களையும் 143 ஓருநாள் போட்டிகளில் விளையாடி 5507 ஓட்டங்களையும் 44 ரி-20 போட்டிகளில் விளையாடி 1363 ஓட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post