சீனாவின் கொரோனா வைரஸ் மேலும் ஐந்து நாடுகளில் பாதிப்பு - Yarl Voice சீனாவின் கொரோனா வைரஸ் மேலும் ஐந்து நாடுகளில் பாதிப்பு - Yarl Voice

சீனாவின் கொரோனா வைரஸ் மேலும் ஐந்து நாடுகளில் பாதிப்பு

சீனாவை அச்சுறுத்திவரும் கோவிட் 19 காய்ச்சல் மேலும் மூன்று ஐரோப்பிய நாடுகளிலும் இந்நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் நோய்த் தாக்கம் மெல்லமெல்ல மற்ற நாடுகளை நோக்கி பரவிக்கொண்டிருக்கிறது. சீனாவில் மட்டும் 2800 பேருக்கும் மேலானோரை பலிகொண்ட இந்நோய் ஈரானில் 46 பேரை பலிவாங்கியது. தென்கொரியாவில் 2000 பேருக்கு இந்நோய் கண்டிருப்பது தெரியவந்துள்ளது.

கோவிட்-19 காய்ச்சல் ஈரான் தென்கொரியா இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான் சிங்கப்பூர் மலேசியா பிலிப்பைன்ஸ் வியட்நாம் ஐக்கிய அரபு அமீரகம் குவைத் கனடா கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இன்று வெளியான தகவல்களின்படி நியூசிலாந்தில் கோவிட் -19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பு முதல் முறையாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நைஜீரியாவிலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளான லித்துவேனியா பெலாரஸ் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

லிதுவேனியாவில் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு பெண்ணிற்கு கோவிட் 19 காய்ச்சல் இருப்பதை லிதுவேனியா உறுதிப்படுத்தியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துணை சுகாதார அமைச்சர் அல்கிர்தாஸ் செசல்கிஸ் அறிக்கை ஒன்றில் கூறுகையில் 'வெரோனாவிலிருந்து திரும்பிய 39 வயதான பெண் ஒருவர் பால்டிக் மாநிலத்தின் வடக்கு நகரமான சியாலியாவில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதிக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் கரோனா வைரஸ்நோய் கண்ட முதல் நபர் குறித்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான வடக்கு இத்தாலிக்கு பயணம் செய்ததால் அவருக்கு இந்நோய் தாக்கியது தேசிய பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது. அந்நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post