தனித்து போட்டியிடப் போகும் எண்ணம் தங்களுக்கு இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பொதுஜன முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கு பதிலளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடும் தீர்மானம் இப்போதைக்கு எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத்தயார் என்றும் அவர் கூறினார்.
Post a Comment