மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் தொண்டமான் - Yarl Voice மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் தொண்டமான் - Yarl Voice

மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் தொண்டமான்

கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி  யாழ்பாணம் யாழ் விஜயம் மேற்கொண்ட மூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் நிலைமைகள் தொடர்பில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி முகாங்களில் தமது வாழ்க்கையினை பல கஸ்டங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

குறித்த முகாமில் 53 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்து. தாங்கள் பிறந்து வழந்த தமது சொந்த நிலத்தில் தாம் வாழவேண்டும் எனவும் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அந்த வேண்டுகோளிற்கு ஏற்ப வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு இன்று ஆறுமுகம் தொண்டமான் மற்றும் அங்கஜன் இராமநாதனினால் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள இந் விடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன்  விசேட விருந்தினராக பங்கேற்றார். 

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி மற்றும் அரச உத்தயோதர்கள் பயனாளிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின்கீழ் புதிய தொழில்நுட்பத்தில் 28 ஆயிரம் கொங்கிரீட் நிரந்தர வீடுகள் மற்றும் பயனாளிகளால் அமைக்கப்படும் நிரந்தர வீடுகள் ஆகியன உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

புதிய தொழில்நுட்பத்திலான வீட்டுத் திட்டத்தில் கொன்கிறீட் தகடுகளைக் கொண்டு நவீன முறையில் 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0/Post a Comment/Comments

Previous Post Next Post