இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - அன்புமணி ரமதாஸ் - Yarl Voice இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - அன்புமணி ரமதாஸ் - Yarl Voice

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - அன்புமணி ரமதாஸ்

போர் குற்ற விசாரணைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே 30 கீழ் 1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக தீர்மானித்துள்ளதாக பா.ம.க நிறுவனர் டொக்டர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐஇநா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் போர் குற்ற விசாரணைகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதை  இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் 30 ஃ1 தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில்  இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர் மேற்படி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர் 'இலங்கையில் நடந்த ஈழப்போர் குறித்த அதன் ஆணையர் தலைமையில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில்  போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் சர்வதேச நீதிபதிகளும்  இலங்கை நீதிபதிகளும் அடங்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைத்து போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்படி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை நீதிமன்ற விசாரணை நடத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த அவர்  இலங்கை அரசு அமைச்சரவையைக் கூட்டி  போர்க்குற்ற விசாரணை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத் தீர்மானங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது எனவும்  கூறியுள்ளார்.

போர்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட அனைவரும்  தற்போது ஆட்சியில் இருப்பது தான் இதற்கு காரணமாகவுள்ளதாக தெரிவித்த அவர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்  போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post