வடக்கு மாகாண அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண அதிபர்களுக்கான நியமனக்களை வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம்.சாள்ஸ் இன்று வழங்கி வைத்தார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வடமாகாண சேர்ந்த 80 ஆசிரியர்கள் அதிபர் தரம் மூன்றுக்கு நியமிக்கப்பட்டு அதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தற்போது வடக்கின் கல்வி நிலை பாரிய பிரச்சினைகளை கொண்டதாக இருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் அதனை சரியாக கட்டியெழுப்புவதற்கு அதிபர்களாக அனைவரும் பாடசாலையிலிருந்து சரியான ஒழுக்கங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டுமென இதன்போது கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போதைய ஜனாதிபதி கையூட்டு பெறுவது துஷ்பிரயோகங்களில் ஈடுபடுதல் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கும் அதற்கு கடுமையான சட்டங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதை தொடர்பான பிரச்சினை தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். சத்தியசீலன் வடமாகாண பிரதி பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Post a Comment