அத்தோடு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்குமர்றும் கோரியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஐ; எழுதியுள்ள கடிதத்திலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அந்தச் செய்திகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் இந்த விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழகத்தால் எடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை தமக்கும் வழங்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்தக் கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.
இதற்கமைய பல்கலைக்கழக நிர்வாக எடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment