முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க அரசாங்கமானது நூலில் ஆடும் பொம்மையாக உள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற விவாதம் குறித்து தி.மு.க தலைவரான ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்திலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்இ தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துஇ கூட்டத்தொடரை நிறைவு செய்திருக்கிறது சட்டப்பேரவை.
பொதுமக்கள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை எடப்பாடி பழனிச்சாமி அரசின் வரவு செலவு திட்டம் மீதான தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ச்சியாகக் காண முடிந்தது. எந்தத் துறையினருக்கும் எவ்விதப் பயனுமற்ற வரவு செலவு திட்டமாகவே இது காணப்படுகின்றது.
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பதவி நீக்க நடவடிக்கை குறித்து பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அது குறித்துக் கேள்வி எழுப்பியபோது பேரவைத்தலைவர் தனது கடமைக்குரிய நடுநிலைத் தன்மையைத் தவறவிட்டு ஆளுந்தரப்புக்கு ஆதரவான முறையிலேயே செயல்படுவதை உணர்ந்து தி.மு.க வெளிநடப்பு செய்தது.
முஸ்லிம்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்காலத்தில் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை தி.மு.க மட்டுமல்ல பா.ஜ.கவின் ஆதரவுக் கட்சிகளே வலியுறுத்துகின்றன. அடிமைக் கட்சியான அ.தி.மு.க மட்டும்தான் தனது தவறை மறைத்து நியாயப்படுத்த அநியாயமான முறையில் மண்டபம் அதிரப் பேசிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது சாத்தியமில்லை என்பதை நாம் மட்டுமல்ல மத்திய இணையமைச்சரே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டார்.
தமிழக அமைச்சர் திரும்பத் திரும்ப இரட்டைக் குடியுரிமை எனப் பொய்யான- அரசியல் சட்டத்திற்கு மாறான- மோசடியான வாக்குறுதி அளிப்பதால் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன். அதனையும் பேரவைத் தலைவர் ஏற்கவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment