தமிழ் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராசி கண்ணா முத்த காட்சியை கலைக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும் விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.
அது குறித்து பதிலளித்துள்ள ராசி கண்ணா 'அந்தக் காட்சிகள் கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு அவை தேவையானவை.
ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை எடுக்கவில்லை. படத்தைப் பார்க்காமல் அவை பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment