கம்பெரெலியாவால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த காரர்கள் இன்று யாழ் மாவட்ட செயலகத்திர்கு முன்பாக நிதியை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைத்திரி-ரணில் அரசின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கம்பரலிய வேலைத்திட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு இன்றுவரை அவர்களுக்குரிய கொடுப்பனவு வழங்கப்படவில்லை என கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒப்பந்தகாரர்களால் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த காரர்களுக்கு இன்றுவரை கம்பரெலிய வேலைத்திட்டத்திற்கான உரிய கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் அந்த நிதியினை மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுத் தரக் கோரியும் குறித்த ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment