வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
யாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். இதன் பொது அவர் தெரிவித்ததாவது..
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர்.
இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான
பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
குறிப்பாக கிறிஸ்தவர்களால் மேறகொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ்ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோருகின்றோம்.
சைவத் தமிழ் மரபு அழைக்கப்படுவதைக் கண்டித்தும் மத வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் கிறிஸ்தர்வர்களால் மேற்கொள்ளப்படுகின்றன அச்சுறுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும்மே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment