தீவகத்தில் அமைக்கப்படும் சர்வதேச பாடசாலையை நேரில் சென்று பார்வையிட்ட அங்கஐன் மற்றும் யாழ் ஆயர் - Yarl Voice தீவகத்தில் அமைக்கப்படும் சர்வதேச பாடசாலையை நேரில் சென்று பார்வையிட்ட அங்கஐன் மற்றும் யாழ் ஆயர் - Yarl Voice

தீவகத்தில் அமைக்கப்படும் சர்வதேச பாடசாலையை நேரில் சென்று பார்வையிட்ட அங்கஐன் மற்றும் யாழ் ஆயர்

தீவக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் அவர்களின் எண்ணக்கருவில் உதித்த இந்தியாவின் “Montfort School” சர்வதேச பாடசாலையொன்று அல்லைப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் இந்த கல்விப்பணியை சிறப்பாக மேற்கொள்ள தமது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று (09.02.2020) யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் அவர்களுடன் பாடசாலை பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிர்மாண வேலைகளையும் பார்வையிட்டதுடன் பாடசாலையின் நிர்மாண பணிகளை துரிதப்படுத்தவும் கல்வி மேம்பாட்டிற்கும் இப்பாடசாலைக்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஆயரிடம் உறுதியளித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post