யாழ் ஊடக அமையத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேர்யே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில்.
உள்ளூர்இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில் நேற்றுமுன்தினம்திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக் கொண்டிருந்த போது இராணுவத்தினர் வருகை தந்தனர்.சற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.
விடுதிக்குள்நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல்நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன். சிசிரிவிபதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிட முடியும் என்றுதெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
அதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள்சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை ஆனால் திட்டமிட்ட வகையில் பொய்யானகுர்ரச்சட்டுக்களை சுமத்தி கைது நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள்அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவ்பம் எமது கட்சியின் தலைவர்அங்கஜன் ராமனாதனின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'சப்ரிகம'நிறைவானகிராமம் எனும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை எதிர்கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்த சதி வேலையாகவே நாம் பார்க்கின்றோம் என்றார்.
Post a Comment