கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் உள்ள சீனா மற்றும் தென்கொரியா சுற்றுலா பயணிகளை இந்நாட்டு மக்கள் நடத்தும் ஒருவித செயற்பாடு கவலை அளிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட ஆரம்பத்தில் இருந்தே இலங்கையில் சீன நாட்டவர்கள் மற்றும் கொரிய நாட்டவர்களை சிலர் அண்டாதவர்களாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் களைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment